728x90 AdSpace

Trending

Ok

Yesuvin Naamam Jeya Naamam :: இயேசுவின் நாமம் ஜெய நாமம் :: Tpm Tamil Songs Lyrics

The Pentecostal Mission (TPM)
Tpm Tamil Songs Lyrics

TPM Tamil Song 516


 இயேசுவின் நாமம் ஜெய நாமம்
நேசிக்க சிறந்ததோர் இன்ப நாமம் x(2)
சர்வத்தையும் ஜெயித்த உயர்ந்த நாமம்
சதாகாலம் ஜெயத்தோடே காக்கும் நாமம் x(2)

ஜெயம் ஜெயம் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் நமக்கே x(2) - இயேசுவின்

பாரங்கள் பாவங்களை போக்கும் நாமம்
பரிசுத்தமாகிடவும் கழுவும் நாமம்
சகல நோய்களையும் சிலுவையில் சுமந்த
சர்வாங்க சுகமதை தரும் நாமமே - (2)
- இயேசுவின்

சாபமே நீங்கி ஆசீர்வாதம் பெறவே
சாத்தானின் கோட்டைகளையும் தகர்க்கும் நாமம்
சத்துருவின் சகல வல்லமையை ஜெயிக்க
சர்வாயுதவர்க்கம் தரித்திடுவேமே - (2)
- இயேசுவின்

மண்ணதில் அதிசயம் காணச்செய்யும்
விண் புவியில் அதிகாரம் உடைய நாமம்
எல்லா முழங்கால்களும் முடங்கிட செய்திடும்
வல்லவரின் நாமம் அதிசயமே -2
- இயேசுவின்

ஊற்றுண்ட தைலமவர் திவ்விய நாமமே
உத்தமரும் கண்ணியரும் நேசிக்கும் நாமம்
ஊற்றிடும் தம் ஆவியால் ஜெயக்கொடி ஏற்றியே
உலகெங்கும் சாட்சியாய் மாற்றும் நாமமே - 2
- இயேசுவின்

கர்த்தரின் நாமமே பலத்த துருகம்
சுத்தர் ஓடி அதற்குள் சுகமாயிருப்பார்
ஜெபத்துடன் விழித்து இயேசுவையே கண்டிட
ஜெயம் கொண்ட ஆண்மகவாகிடுவேமே -2 
- இயேசுவின்








 
Yesuvin Naamam Jeya Naamam :: இயேசுவின் நாமம் ஜெய நாமம் :: Tpm Tamil Songs Lyrics Reviewed by Nethanathaneal on 12:22:00 Rating: 5 The Pentecostal Mission (TPM) Tpm Tamil Songs Lyrics TPM Tamil Song 516  இயேசுவின் நாமம் ஜெய நாமம் நேசிக்க சிறந்ததோர் இன்ப நாம...

No comments: