728x90 AdSpace

Trending

Ok

ஆதி திருவார்த்தை திவ்ய :: Tamil Old Christmas Song

Tamil Christian Songs Lyrics
athisayam christmas song 
tamil christmas songs lyrics
Jingle bell christmas song in tamil

ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார்
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட

மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனு குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீன் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

ஆதாம் ஓதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்

அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
ஆதி திருவார்த்தை திவ்ய :: Tamil Old Christmas Song Reviewed by Nethanathaneal on 00:24:00 Rating: 5 Tamil Christian Songs Lyrics athisayam christmas song  tamil christmas songs lyrics Jingle bell christmas song in tamil ...

No comments: