Song Written & Sung by : Pr Guru Isak Sis Jamuna Guru Isak
Ft. Pr Asborn Sam sis Sheeba Asborn Sam


நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லன்னா நானும் இல்ல - (2) (உம்மைப் போல ) நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2) என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே - (2) 2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2) என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே - (2) (உம்மைப் போல ) 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2) உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன் - (2)
No comments: