728x90 AdSpace

Trending

Ok

நிர்மூலம் ஆகாததும் :: Nirmoolam Aagaadhadhum :: 2023 TPM Annual convention songs

SERVICE OF SONG | TPM HYMNS
The Pentecostal Mission (TPM)
TPM Songs Zion Pentecostal Mission
2023 tpm convention songs
2023 Annual International Convention Songs Lyrics
நிர்மூலம் ஆகாததும், நின்று நிலைநிற்பதும்
வழுவாமல் இருப்பதும் கிருபையே
இம்மட்டும் ஜீவிப்பதும் உந்தன் கிருபையே
இனியும் வாழ்வதும் கிருபைதான்.

1. என் கால்கள் சறுக்கிடும் நேரமெல்லாம்
தாங்கினீரே உந்தன் கிருபையாலே
உந்தன் ஆறுதல் உள்ளத்தை தேற்றினதே
நான் இருப்பதும் கிருபையாலே - நிர்மூலம்

2. கடக்கமுடியாத பாதைகளில் 
கடந்து சென்றிட பெலன் தந்தீரே
என்னைக் கன்மலை வெடிப்பினில் பாதுகாத்தீர்
நான் நிலைக்கின்றேன் கிருபையாலே - நிர்மூலம்

3. யோர்தானின் அலைபோல துன்பம் வந்தும்
யோசுவாவின் தேவன் துணை நின்றீரே
”நீ கலங்காதே” என்றென்னைத் தேற்றினீரே
முன்செல்கின்றேன் கிருபையாலே - நிர்மூலம்

4. உம்மாலே சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்
தேவனால் மதிலையும் தாண்டிடுவேன்
என் இருளைல்லாம் வெளிச்சமாய் மாற்றிடுவீர்
நான ஜெயிப்பேன் உம் கிருபையாலே - நிர்மூலம்

5. மண்ணான சரீரமும் மாறிடுமே
விணசாயலை அன்று அடைந்திடுவேன்
ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி
பறந்துயர்வேன் உம் கிருபையாலே - நிர்மூலம்

நிர்மூலம் ஆகாததும் :: Nirmoolam Aagaadhadhum :: 2023 TPM Annual convention songs Reviewed by Nethanathaneal on 09:43:00 Rating: 5 SERVICE OF SONG |  TPM HYMNS The Pentecostal Mission (TPM) TPM Songs  Zion Pentecostal Mission 2023 tpm convention songs 2023  Annual ...

No comments: