728x90 AdSpace

Trending

Ok

Anuppum Deva Um Aaviyinai Lyrics :: அனுப்பும் தேவா உம் :: Old traditional Song

Tamil Christian Songs Lyrics
Old traditional Song
 

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே

சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட
Anuppum Deva Um Aaviyinai Lyrics :: அனுப்பும் தேவா உம் :: Old traditional Song Reviewed by Nethanathaneal on 12:43:00 Rating: 5 Tamil Christian Songs Lyrics Old traditional Song   அனுப்பும் தேவா உம் ஆவியினை அடியார் மீதே இவ்வேளையிலே பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி ப...

No comments: