728x90 AdSpace

Trending

Ok

நீங்கள் அறியாத ஒருவர்! - Someone you don't even know :: Pastor. osborne jebadurai tamil sermon

நீங்கள் அறியாத ஒருவர்!
Message By: Ps. Osborne Jebadurai
pastor. osborne jebadurai tamil sermons, 
The Road to Emmaus: When You Can't See Jesus

“யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்” (யோவ. 1:26).

யோவான்ஸ்நானகன் இந்த வார்த்தையை சொல்லும்போது இந்த மேசியா யார்? கிறிஸ்து யார்? என்று அறியாதவனாகவே சொல்லுகிறான். யோவான் 1:31 நானும் இவரை அறியாதிருந்தேன்.

யோவான் 1:33 ஆம் வசனத்தில் நான் இவரை அறியேன் என்று சொல்லுகிறான். ஆனால் என்னை ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி அனுப்பினவர் ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிற மேசியா, அவர்தான் கிறிஸ்து.

 இயேசுகிறிஸ்து யோர்தான்  நதியில் ஞானஸ்நானம் பெற்று  கரையேறின போது வானம் திறக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவை போல இயேசுகிறஸ்துவின் மேல் இறங்கி வந்து அமர்ந்ததை யோவான்ஸ்நானகன் பார்க்கிறான்.

 இந்த அடையாளம்தான் யோவான்ஸ்நானகனுக்கு முன்னறிவிக்கப்பட்ட ஒரு அடையாளம். இந்த உலகத்திற்கு வந்தபோது வேதம் சொல்லுகிறது, அவர் தமக்கு சொந்தமானவரிடத்தில் வந்தார். அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

 ஏன்? இயேசு யார் என்பதை அவர்கள் அறியாமலிருந்தார்கள். சிருஷ்டிகராகிய தேவன் அவர்களோடுகூட நடந்தார், பேசினாலும்கூட அறியாமல் இருந்தார்கள். அவர்களுக்கு ஜீவனை கொடுக்கவும் ஜீவன் பரிபூரணப்படவும் வந்த இயேசுவை அவர்கள் அறியாமலிருந்தார்கள். இவர் மூலமாகதான் அவர்கள் ”வாசித்தார்கள், வாழ்ந்தார்கள், வசித்தார்கள், உண்டார்கள். ஆனால் இவரை அறியாமலிருந்தார்கள்.

 ஒரு விசை ஒரு போதகர் ஒரு கிறிஸ்தவ புத்தக நிலைத்திற்கு போயிருந்தார்.  அவர் சில சி.டிக்களையும் வேறு சில பொருட்கள் புத்தகங்கள்  எல்லாம் வாங்கினார். இறுதியாக அந்த பணம் கொடுக்கிற இடத்திற்கு வந்தார்.

 அவர் இவரை பார்த்து கேட்டார், ஐயா நீங்கள் எந்த ஆலயத்திற்கு போகிறீர்கள்? அந்த போதகரும்கூட தன்னை போதகர் என்று சொல்லாதபடி நான் அந்த ஆலயத்திலிருந்து வருகிறான் என்று சொன்னார். உடனே அவருக்கு ஓ! நீங்கள் அந்த ஆலயத்திற்குதான் போகிறீர்களா என்று ஒரே மகிழ்ச்சி. என்னுடைய மனைவி பிள்ளைகளெல்லாம் அந்த ஆலயத்திற்கு சபைக்குதான் போகிறார்கள்.

 நான் அவிசுவாசியாக இருந்தேன். இப்போதுதான் சமீபத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன். நானும் அந்த ஆலயத்திற்குதான் போகிறேன் என்று சொல்லி திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் அந்த ஆலயத்திற்கு போக ஆரம்பித்ததிலிருந்து எங்களுடைய குடும்பத்தில் ஏராளமான அற்புதங்களை ஆண்டவர் செய்திருக்கிறார்.

 நீங்கள் யாரிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த பாஸ்டர்தான் நான். உடனே அவர் மன்னிப்பு கேட்டு சொன்னார், சாரி பாஸ்டர். நீங்கள் அந்த சபையின் போதகர் என்று எனக்கு தெரியாது. இந்த மனிதன் அந் போதகரோடுகூட தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் அவர் யார் என்று இந்த மனிதனுக்கு தெரியாதபடியினாலே அவரோடுகூட தொடர்பு முடியவில்லை.

 இன்றைக்கு அநேக விசுவாசிகள். கிறிஸ்து யார் என்று அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். ஆதலால்தான் இயேசுவோடுகூட ஐக்கியம் கொள்ளமுடியாதபடி அவருடைய ஆசீர்வாதங்களை பெற முடியாதபடி இருக்கிறோம்.

 அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத் 1:12 -ல் நான் விசுவாசிக்கிறவர் நம்புகிறவர் இன்னார் என்பதை அறிந்திருக்கிறேன். எனக்கு அந்த இயேசுவை தெரியுமா? எனக்கு அவரை தனிப்பட்ட வாழ்க்கையில் தெரியுமா?

 1. “ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது” (லூக். 32:16).

 அவர்களுடைய கண்கள் மறைக்கபட்டிருந்தது. லூக்.24:13-31 -லிருந்து இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு ஏராளமான சீஷர்கள் மிகவும் ஏமாந்து போனார்கள். அநேகருடைய கனவுகள் மாயையாய் மறைந்து போனது. அவர்கள் மிகவும் குழப்பத்தின் மத்தியிலே பயத்தின் மத்தியிலே காணப்பட்டார்கள்.

 சில சீஷர்கள் எம்மாவு என்று சொல்லப்படக்கூடிய ஊருக்கு நேராய் நடந்து போய் கொண்டிருக்கிறார்கள். இந்த எம்மாவு என்ற ஊரானது எருசலேமிலிருந்து 7 மைல்கள் தூரத்தில் காணப்படுகிறது.

 இயேசுகிறிஸ்துவும்கூட ஒரு சக பிரயாணியாக அவர்களோடுகூட இணைந்து கொள்ளுகிறார். ஒரு வழிப்போக்கரை போல இணைந்த இயேசு அவர்களை பார்த்து கேட்டார், நீங்கள் உங்களுக்குள்ளே ஏதோா பேசுகிறீர்களே என்ன பேசுகிறீர்கள்? அவர்கள் சொன்னார்கள், ஐயா உங்களுக்கு ஒன்று தெரியுமா இயேசு என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாதா?

 அவர் ஒரு அருமையான ஒரு நபர், ஒரு வல்லமையான ஊழியத்தை செய்தார், அற்புதங்களையெல்லாம் செய்தார் என்று சொன்னார்கள். ஆனால் இந்த மாயக்காரர்கள், பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள்.  இயேசுவைதான் மிகவும் நம்பியிருந்தோம். இஸ்ரவேலை மீட்கிற மீட்பர். அவர்தான் எங்களை இரட்சிப்பார் என்று இருந்தோம்.

 அந்த நேரத்தில்தான் இயேசு அவர்களை பார்த்து அவர்களுக்கு வேத வாக்கியங்களை விளக்கி சொல்ல ஆரம்பித்தார். லூக். 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மை குறித்து சொல்லியவைகளை விவரித்து காண்பித்தார்.

அவர் இப்படி பேசும் பொழுது அந்த சீஷர்களுக்கு கொஞ்சம் தெளிவு உண்டாயிற்று. அவர்களுடைய இருதயமானது கொழுந்து விட்டு  எரிந்தது மனுஷக்குமாரன் பாடு  படவேண்டும்.  அவர்  சிலுவையிலே அறையப்பட்டு மரிக்க வேண்டும். 3ம் நாளிலே உயிரோடு கூட எழுந்திருக்க வேண்டும் இயேசு சொன்ன வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.

 மாலை நேரம் வந்த பொழுது இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அப்பத்தை பிட்டு கொடுத்தார். அந்த நேரத்தில் தான் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. அவர் யார் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

 இந்த இயேசு யார் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு ÷ வளை சொல்லலாம் நான் இரட்சிக்கப்பட்டு ரொம்ப வருடம் ஆனது.  இந்த சீஷர்களுக்கு கூட இயேசுவை ரொம்ப நன்றாக தெரியும். இயேசுவோடு கூட இருந்தவர்கள்  இயேசுவோடு கூட நிறைய பேசியிருப்பார்கள் அவரை தொட்டிருப்பார்கள். இயேசுவுடைய போதனைகளை நிறைய கேட்டிருக்கிறார்கள்.

 ஆனால் எதிரிடையான சூழ்நிலை வரும் பொழுது அவர்கள் நம்பியிருந்த அந்த  நபர்  திடிரென்று சிலுவையில் அறையப்பட்டு  போன போது அவர்கள் கொடுக்கப்பட்ட, கேள்விப்பட்ட எல்லா வேத வாக்கியங்கள் மறந்து போனார்கள்.

 நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவில் நிற்கிறார். நீங்கள் சொல்லலாம் எல்லா வசனங்களும் எனக்கு மனப்பாடமாக தெரியும் என்று சொல்லலாம்.

 நான் ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை கூட பெற்றுக்கொண்டேன் ஆனால் இன்றைக்கு நீங்கள் துக்கத்தோடு அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுகிறீர்கள் கர்த்தர் என்னை கைவிட்டு விட்டார்.

 இஸ்ரவேலை  மீட்பார் இரட்சிப்பார்  என்று விசு வாசித்தோமே  ஆனால் அவர் எங்களை கைவிட்டு விட்டு போய்விட்டாரே.

 ஆனால் என்னுடைய பாடுகளின் பாதையிலே அவர் எங்கே போனார் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் காணப்படவில்லையே பயமும் சந்தேகமும் கண்களை குருடாக்கி கொண்டு வைத்திருக்கலாம் இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன். உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை அப்படி இருக்க ஏன் நீங்கள் அவரையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அவருடைய வல்லமையும்  நீங்கள் காணமுடியவில்லை.

 எம்மாவூருக்கு போன அந்த சீஷர்களை போல தான் கர்த்தருடைய வசனத்தை வார்ததையை மறந்து போனீர்கள் அவருடைய வாக்குத்தத்தை பற்றிகொண்டு விசுவாசித்து ஜெபிப்பதற்க்கு மாறாக பிரச்சனைகளை நாம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். உங்கள் சரிரத்தில் பார்க்கின்ற வியாதியின் அடையாளத்தை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் உங்களுடைய குடும்ப பிரச்சனைகளை பொருளாதார நெருக்கடியை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள்.

 இப்போ நமக்குள்ளே  சந்தேகமம்  பயமும் வந்துவிட்டது . ஆனால் ஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டும் உன்னுடைய வாழ்க்கை பயணத்திலே இயேசு உன்னோடு கூட இருக்கிறார்.  இந்த காலை பொழுதில் உன்னை மாற்ற வல்லவர் அவர் உங்களை தூக்கி விட வல்லவர் அவர் உங்களுக்கு உதவி செய்ய வல்லவர்  இன்றைக்கு மறைக்கப்பட்ட  உங்கள் கண்கள்  திறக்கப்பட போகிறது.

 வேத வாக்கியங்களை விவரித்து காண்பிக்கும் பொழுது எப்படி அவருடைய உள்ளங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததோ இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தை கேட்கும் பொழுதே பரிசுத்தாவியானவர் உங்கள் உள்ளத்திலே ஒரு வெளிச்சத்தை கொண்டுவருவார்.

 2. மகதலேனா மரியாள் துக்கத்தில் இருந்த அவளை இயேசு வெளிப்படுத்தி அவளுடைய துக்கத்தை  எல்லாம் மாற்றினார் “இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்” (யோவான்.20.14). இயேசு அவளுடைய பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தார்.

 நின்று கொண்டிருக்கிறவர் இயேசு தான் என்று தெரியவில்லை.  கண்ணீரின்  பாதையில்  கடந்து போகும் பொழுது நாம் கண்ணீரின் பள்ளத் தாக்கிலே உருவ நடக்கும் பொழுது நம்முடைய உள்ளத்திலே தவிப்பும் கலக்கமும் உண்டாகும் போது நம்முடைய துக்கத்தை மட்டும் தான் நான் பார்ப்போம்  ஓ இயேசு என்னை கைவிட்டாரே அவர் என்னை விட்டு போய்விட்டாரே சீயோன் சொல்லுகிறான்.

 உண்மை என்ன தெரியுமா? அந்த நேரத்திலும் இயேசு உங்களுடனே கூட நின்று கொண்டிருக்கிறார். 

 காலையிலே அந்த கல்லறையினிடத்திற்க்கு ஓடி வருகிறாள் ஏற்கனவே இயேசு சிலுவையில் மரித்தார்.என்கின்ற துக்கம் அவரை நிரப்பியிருந்தன அங்கே போனால் அதிர்ச்சி ஒரு ஏமாற்றம் அந்த கல்லறை திறந்திருந்தது அங்கே சரிரமும் இல்லை ஒரு வேளை இயேசு சொன்ன அந்த வார்த்தைகளை வேதங்களைஅவள் நினைவு கூர்ந்திருந்தால் அந்த திறக்கப்பட்ட கல்லறையை பார்த்து என்ன செய்திருப்பாள் அவள் மகிழ்ந்திருப்பாள். மகிழ்ச்சியோடு துள்ளி குதித்திருப்பாள்.

 அவள் அழுது கொண்டே இருக்கிறாள். நாம் அடைக்கல ஆராதனைக்கு போவோம் என்றால் சில நேரத்திலே மிகவும் பிரியமானவர்கள் நெருக்கமானவர்கள் கொஞ்ச நேரம் அழுவார்கள், கொஞ்ச நேரம் அமைதியாயிருப்பார்கள் திடிரென்று மனதிலே ஏதோ யோசிப்பார்கள்.  திரும்ப அழுவார்கள் ஆனால் இந்த மகதலேனா  மரியாளை பாருங்கள் அவள் அழுதுக்கொண்டே இருக்கிறாள்.

 இயேசு மாத்திரம் என் கூட இருந்திருந்தால் ஏன் இந்த துக்கம் என்று நினைத்திருப்பாள் ஓ என்னுடைய வாழ்க்கையிலே பாதுகாப்பற்றான நிலமை வந்திருக்காதே.

ஒரு விசை ஒரு சகோதரி அழுதுக் கொண்டே இருக்கிறார்கள்.  நான் அந்த அம்மாவை பார்த்து கேட்டேன் அம்மா உங்களுக்கு ஜெபம் செய்யட்டுமா என்று கேட்டேன் ஆனால் அந்த அம்மா என்னை ஜெபிக்க கூட விடவில்லை. இந்த பிரச்சனை வந்துவிட்டது என் வாழ்க் கையில் நான் கொஞ்ச நேரம் பொருமையாக கேட்டு கேட்டு பார்த்தேன். அழுகையை  நிறுத்து  இப்போதாவது ஜெபம் செய்கிறேன். ஆனால் அந்த அம்மா திரும்பவும் அழுதுக்கொண்டே சொன்னார்கள். ஐய்யய்யோ இந்த பிரச்சனை எல்லாம் ஒரு நாளும் தீரவே தீராது.

 அதுதான் தீராதென்று தெரியுமே. அப்புறம் ஏன் ஜெபிக்க வந்தீர்கள்? இயேசு அவர்களுக்கு விடுதலை தருவார் என்ற அக்கறை கூட அவர்களுக்கு இல்லை. அந்தம்மாவுக்கு இப்போது பிரச்சனைதான் பெரியதாக தெரிகிறது.

 ஒருவேளை மகதலேனாமரியாளும் துக்கத்தைதான் அவர்கள் பார்த்தார்களே தவிர, பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த இயேசுவை பார்க்கவில்லை.

 இயேசு மகதலேனா மரியாளைப் பார்த்துச் சொன்னார், ஸ்திரீயே, நீ ஏன் அழுகிறாய்? இயேசு கிறிஸ்துவை திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்தும் கூட அவர் இயேசு என்பதை அறியாமல்  இருந்தார்.

 துக்கத்தின் நேரத்தில் இயேசு உன் பக்கத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார். இந்த காலைநேரத்தில் இயேசு உனக்கொரு அற்புதத்தை செய்ய முடியும். உன் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற அவர் வல்லமையுடையவர்.

 இயேசு மகதலேனாக மரியாளை பெயர் சொல்லி கூப்பிடுகிறார். மரியாளே! என்று கூப்பிட்டவுடனே அப்போதுதான் அவள் கண்கள் திறக்கப்பட்டன. இன்றைக்கும் இயேசு உன்னை பெயர் சொல்லி அழைக்கிறார். ஆண்டவர் சொல்லுகிறார், ஏசா.43:1-ல்  நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன்.

 கஸ்தூரி, ஏன் நீ அழுகிறாய்? எலிசபெத்,ஏன் நீ அழுகிறாய்? ஆல்பர்ட், நீ ஏன் அழவேண்டும்? ப்ரவின், நீ

 ஏன் அழ வேண்டும்?

 கவலையில் ஆறுதலும் கங்குலியின் என் ஜோதியும்

 கஷ்டப் நோய்படுக்கையில் கைகண்ட ஓளஷதமும்

 எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே

 தொல்லை மிகும் இவ்வுலகில் துணை இயேசுவே

 3. கடைசியாய் இயேசு தன்னை தம்முடைய சீஷர்களுக்கு யாரென்று வெளிப்படுத்தி, அவர்களுடைய வேலையை ஆசீர்வதித்தார்.விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்(யோவான்21:4).

 இங்கே அந்த கடற்கரையில் இயேசு நின்றுக் கொண்டு சீஷர்கள் செய்கிற அந்த வேலைகளை அவர்கள் பிரயாசத்தை அவர்களுடைய உழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவை கைது செய்து, சிலுவையில் அறைய கொண்டு போனபோது, இந்த சீஷர்களெல்லாரும் பயத்தினால் சிதறிப் போய்விட்டார்கள்.

 யோசித்தார்கள், அவ்வளவுதான். இயேசு நம்மை விட்டு போய்விட்டார். இனி வரமாட்டார். இயேசப்பா உங்களுக்கு பெரிய கும்பிடு. எங்களுக்கு உங்களுடைய ஊழியமும் வேண்டாம். உங்களுடைய அழைப்பும் வேண்டாம். முன்பு செய்திருந்த வேலைக்கே போய்விட்டார்கள்.

 இரா முழுவதும் பிரயாசப்பட்டார்கள். இரா முழுவதும் அவர்கள் உழைத்தார்கள். ஆனால் ஒரு மீன் கூட பிடிக்கவில்லை.

 அவர்களுடைய பிரயாசம், அவர்களுடைய உழைப்பு, அவர்களுடைய வேலையெல்லாம் வீணாய் போனது.

 எங்கே மீன் இருக்கும், எங்கே வலையை போட வேண்டும்? எப்படி பிடிக்க வேண்டும் என்று எல்லாமே தெரியும். ஏனென்றால் அவர்களுக்கு நல்லதொரு அனுபவம் இருந்தது.

 மிகவும் கடினப்பட்டு உழைத்தார்கள். மிகவும் ஏமாற்றமுண்டானது.

 நாமும் அப்படிப்பட்ட ஏமாற்றங்களை சந்திக்கும்போது நாம் எப்படி இருப்போம்? சீஷர்களைப் போலத்தான் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு கரைக்கு வருவோம்.

 இயேசு அவர்களைப் பார்த்து மனதுருக்கத்தோடு என் பிள்ளைகளே, அவர்களைப் பார்த்து என்னை நீ சிலுவையிலே அறைந்தாயே நன்றி கெட்ட பசங்களா என்னைவிட்டு ஓடிவிட்டீர்களே? அப்படியெல்லாம் அவர் சொல்லவில்லை.

 அவர்களைப்பார்த்து என்ன சொன்னார்? என் பிள்ளைகளே? இன்றைக்கு ஒருவேளை நீங்களும் இயேசுவை விட்டு தூரமாக போயிருந்திருக்கலாம்.

 அவர்களுக்கு நல்ல ஒரு ஆலோசனையை இயேசு தருகிறார். உங்கள் வலைகளை வலப்பக்கத்திலே போடுங்கள். ஏனென்றால் இயேசு உங்கள் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

 சங்.16:8-ல் தாவீது சொல்லுகிறார்; கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் எனது வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறபடியினால், நான் அசைக்கப்படுவதில்லை. நான் தோல்வியை என் வாழ்க்கையில் சந்திப்பதில்லை.

 அவருடைய வார்த்தையை நம்பி அவர்கள் வலப்பக்கத்தில் வலையைப்போட்டார்கள். இதோ அவர்கள் திரளான மீன்களைப் பிடித்தார்கள்.

 உங்களுடைய தொழிலை, வியாபாரத்தை வலப்பக்கத்திலே செய்யுங்கள். என்னுடைய உங்களுடைய வலதுபாரிசத்திலே வைத்துக்கொண்டு, நீங்கள் எல்லாவற்றையும் செய்யுங்கள். உன்னுடைய படிப்பிலே, உன்னுடைய வேலை ஸ்தலத்திலே, என்னை உன் வலது பக்கத்தில் வைத்துக்கொள். இதுவரைக்கும் தவறான திசையிலே உன் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கலாம்.

 இதுவரைக்கும் உன்னுடைய சொந்த திறமையை, சொந்த தாலந்தை நம்பியிருக்கலாம். உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள். அவர் உங்களை செவ்வையான பாதையிலே நடத்துவார்.

 இந்த தெய்வீக ஆலோசனையை அவர்கள் கேட்ட உடனே, அவர்கள் திரளான மீன்களைப்பிடித்தார்கள். அப்பொழுதுதான் யோவானுடைய கண்கள் திறக்கப்பட்டது. அங்கே நமக்கு அறியாதவராய் இதுவரைக்கும் நின்று கொண்டிருந்த இந்த மனுஷன், இவர்தான் ஆண்டவர்.

நீங்கள் அறியாத ஒருவர்! - Someone you don't even know :: Pastor. osborne jebadurai tamil sermon Reviewed by Nethanathaneal on 20:32:00 Rating: 5 நீங்கள் அறியாத ஒருவர்! Message By: Ps. Osborne Jebadurai pastor. osborne jebadurai tamil sermons,  The Road to Emmaus: When You Can't Se...

No comments: