728x90 AdSpace

Trending

Ok

இம்மட்டும் கிருபை தந்த - Immattum Kirubai Thandha :: Tamil Christian Keerthanaigal Song Lyrics

Tamil Christian Keerthanaigal Song Lyrics

இம்மட்டும் கிருபை தந்த தேவா இனி மேலும் கிருபை தாரும் மூவா இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே இயேசு நீர் என்னில் உருவாகவே உம்மை காணவே

1. சோதிக்கப்பட்ட தூய தேவா சோதனையில் பெலன் தாரும் மூவா துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே இன்ப ஒளி என்னில் வீசியே இருள் நீக்குமே 2. பக்தியில்லை நான் ஆராதிக்க யுக்தியில்லை உம்மை துதிக்க சத்திய ஆவியின் வல்லமையால் சக்தியைத் தாரும் உத்தமராய் உம்மை துதிக்க 3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே என்றும் நின் கிருபை பொழிவதினால் அன்றுன் உதிரம் சிந்தினதால் இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய் புரண்டோடுதே 4. சத்துருவான சாத்தான் என்னை நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே சாத்தானை ஜெயம் பெற்றிடவே சத்திய ஆவி வல்லமையை என்னில் ஊற்றும் 5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும் ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க உன்னதா உலகை நீர் ஜெயித்தீர் உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன் அல்லேலூயா
இம்மட்டும் கிருபை தந்த - Immattum Kirubai Thandha :: Tamil Christian Keerthanaigal Song Lyrics Reviewed by Nethanathaneal on 23:23:00 Rating: 5 Tamil Christian Keerthanaigal Song Lyrics இம்மட்டும் கிருபை தந்த தேவா இனி மேலும் கிருபை தாரும் மூவா இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே இயே...

No comments: