Tamil Christian Songs Lyrics
tamil christian new year songs
tamil christian new year songs
Elim Church Promise Song 2017
Album : Sathiyamum Kirubaiyum
Lyrics By : Bro. J. Sam Jebadurai
Song 1
Album : Sathiyamum Kirubaiyum
Lyrics By : Bro. J. Sam Jebadurai
Song 1
நாட்களை நன்மையால் முடிசூட்டுமையா...
வழிநடத்துமையா... பாதை காட்டிடுமையா...
பல்லவி
விலகாத ஸ்தம்பமே... மேக ஸ்தம்பமே...
அக்கினி ஸ்தம்பமே... தேவ ஆவியே
சரணம்
1. மாறா அன்புடன், மேலான நேசமுடன்
பாசமிகு செட்டைகளில், சுமந்தீரே இதுவரை
உள்ளம் உருகுதே... நெஞ்சம் நிறையுதே...
தேவா, நீர் பாராட்டும் திவ்ய அன்பினால்!
2. அனாதி நேசத்தால், நித்ய கருணையால்
இதுவரை நடத்தி, என்னை வெற்றி சிறக்க செய்தீரே
இன்னும் தாங்குவீர்... இனிமேலும் நடத்துவீர்...
மகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே!
3. உன்னத பெலத்தினால், ஆவியின் நிறைவினால்
தேவகிருபையினால், நிரப்பினீரே என்னையும்
இன்னும் நேசிப்பேன், இன்னும் புகழுவேன்
ஆத்தும நேசரே, என் அன்பின் இயேசுவே!
4. கண்ணீரின் ஆவியால், விண்ணப்ப ஆவியால்
நிரம்பியே ஜெபித்திட, இப்பொழுதே ஊற்றுமே...
வரங்கள் தாருமே... வல்லமை ஊற்றுமே...
அக்கினி ஜுவாலையாக பற்றி எரிந்திட!
Naatkalai nanmaiyaal mudi soottumaiyaa..
Vazhi nadathumaiyaa… paathai
kaattidumaiyaa..
Ch:
Vilagatha sthambame… mega sthambame..
Akkini sthambame… theva sthambame…
Maaraa anbudan, melaana nesamudan
Paasamigu settaigalil, sumantheere ithu
varai
Ullam uruguthe… nenjam niraiyuthe…
Devaa, neer paaraattum divvya anbinaal!
Anaathi nesaththaal, nithya karunaiyaal
Ithuvarai nadathi, ennai vetri sirakka
seitheere
Innum thaanguveer… inimelum
nadathuveer..
Magimaiyile ennai serthuk kolveere!
Unnatha belathinaal, aaviyin niraivinaal
Deva kirubaiyinaal, nirappineere
ennaiyum
Innum nesippen, innum pugazhuven,
Aathuma nesare, en anbin yesuve!
Kanneerin aaviyaal, vinnappa aaviyaal
Nirambiye jebithida, ippozhuthe
ootrume..
Varangal thaarume… vallamai ootrume..
Akkini jwaalaiyaaga patri erinthida!
