Tamil Christian Songs Lyrics
Album : Ikkala Ezhiyave Ezhumbu
எக்காள சத்தத்தால் வீறுகொண்டு நீ எழும்பு
இக்கால எலியாவே கர்த்தருக்காய் எழும்பு
சீயோனே உன் வல்லமையை தரித்தெழும்பு
1. கோலியாத்தை வீழ்த்திடவும்
தேவஜனம் மகிழ்ந்திடவும்
கர்த்தருக்காய் நீ எழும்பு
ஜீவனுள்ள தேவனுண்டு
கல்லுமுண்டு, கவணுமுண்டு
வைராக்கியமாய் நீ எழும்பு - எக்காள
2. கிதியோனே எழும்புவாயா
அடிமைத்தனம் முறித்திடவே
உனக்குள்ள பெலன் போதுமே
எதிர்த்து நிற்கக் கூடாத
வாக்கினையும் வல்லமையும்
பெற்றிடவே நீ எழும்பு - எக்காள
3. தெபோராக்கள் எழும்ப வேண்டும்
எஸ்தர்கள் ஜெபிக்க வேண்டும்
தேசத்துக்காய் நீ எழும்பு
எரிகோக்கள் தகர்க்க வேண்டும்
பாகால்கள் அழியவேண்டும் - எக்காள
4. வெற்றி வாகை சூடிட எழும்பு
சர்ப்பங்களை மிதித்திடவும், சாபங்களை முறித்திடவும்
அதிகாரத்தோடே எழும்பு
ஜெயத்தின்மேலே ஜெயம் பெற்று
சீயோனை சுதந்தரிக்க
தீர்மானமாய் எழும்பு
Ekkala saththatal veerukondu nee elzhumbu
ikkala eliyave karttarukkay elumpu
Seeyone un vallamaiyai tarittelumbu
Goliyaathai veelthidavum
Devajanam magilndidavum
karthtarukkai nee elzhumbu
jeevanulla devanuddu, kallumundu,
kavanumundu vairakkiyamai elzhumbu
Gidiyone elumbuvaaye,
Adimaittanam murindidave
Unakkulla Belan podhume
edhirthu nirkka koodadha
vakkinaiyum vallamaiyum
petridave nee elzhumbu
Teborakkal elzhumba vendum,
esthargal jepikka vendum
tesathukkai nee elzhumbu
erigokkal thagarkka vendum,
paagalgal aliyavendum
vetri vaagai Sooda elzhumbu
Sarppangalai midhithtidavum,
Saabangalai murithtidavum
adigaarathode elzhumbu
jeyathtinmele jeyam pettru
Seeyonai Sudantarikka
Tirmanamaai elzhumbu
